Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏப்ரல் 21 அன்று 2550-வது பகவான் மகாவீர் நிர்வான் மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 21 அன்று காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2550-வது பகவான் மகாவீர் நிர்வான் மஹோத்சவத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிடும் பிரதமர், இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

24 வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர், அகிம்சை, சத்யம் (உண்மை), அஸ்தேயா (திருடாமை), பிரம்மச்சரியம் (கற்பு) மற்றும் அபரிக்ரஹா (பற்றற்ற தன்மை) போன்ற சமணக் கொள்கைகள் மூலம் அமைதியான சகவாழ்வு மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாதையை ஒளிரச் செய்தார்.

மகாவீர் சுவாமி ஜி உட்பட ஒவ்வொரு தீர்த்தங்கரின் ஐந்து முக்கிய நிகழ்வுகளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்: சியவன / கர்ப்ப (கருத்தரிப்பு) கல்யாணர்; ஜென்ம (பிறப்பு) கல்யாணகர்; தீக்ஷை (துறவு) கல்யாணகர்; கேவல்ஞானம் (சர்வஞானம்) கல்யாணம் மற்றும் நிர்வாணம் (விடுதலை / இறுதி முக்தி) கல்யாணகர் ஆகியவை இதில் அடங்கும். 21 ஏப்ரல் 2024 பகவான் மகாவீர் சுவாமியின் ஜன்ம கல்யாணக் ஆகும். மேலும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த துறவிகளுடன் சேர்ந்து பாரத மண்டபத்தில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சபையை ஆசீர்வதிப்பதன் மூலம் ஜெயின் சமூகத்தினருடன் இந்த நிகழ்வை அரசு நினைவுகூருகிறது.

***

AD/PKV/DL