Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எஸ்ஸெல் குழுமத்தின் 90வது ஆண்டு கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு


புது தில்லியில் நடைபெற்ற எஸ்ஸெல் குழுமத்தின் 90வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பங்கேற்றார்.

பிரதமரை வரவேற்ற எஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் திரு. சுபாஷ் சந்திரா, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். குடிநீர் விநியோகம், மின் விநியோகம், தூய்மை இயக்கம், ஏழைகள் வாங்க கூடிய வீடுகள் ஆகிய துறைகளில் இக்குழுமத்தின் சமீபத்திய சமூக கொள்கை முனைவுகள் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் இரண்டு கொள்கை திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், சார்த்தி என்ற திட்டம் – கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் மக்களுக்கு அதிகாரம் அளித்தல், தேவைப்படும் மக்களுக்கு ரூ. 5000 கோடி நிதி உதவி கொண்ட டி.எஸ்.சி நிறுவனமும் அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த நிகழ்ச்சி இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக உள்ளது. குடும்ப நடத்தை முறைகளை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்வது மற்றும் தங்களின் திறனையும் திறமைகளையும் குடும்பத்திற்காக பங்களிப்பது இந்தியாவின் கலாச்சாரம் ஆகும் என்று பிரதமர் கூறினார்.

திரு. நந்த்கிஷோர் கோயங்காவுடனான தனது சந்திப்புகளை நினைவுகூறிய அவர், அவரின் குடும்பம் எப்போழுதுமே புதிய எண்ணங்களை வரவேற்பார்கள். ஒவ்வொரு சவாலையும், வாய்ப்பாக மாற்றி நிலம் முதல் செயற்கைக்கோள் வரை சாதித்துள்ளனர்.

எஸ்ஸெல் குழுமத்தின் சமூக கொள்கை திட்டங்களை பாராட்டிய பிரதமர், தூய்மை இந்தியா இயக்கம் சமூக தொழில் முனைவோர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கும் என்றார். உரிமைகள் மற்றும் கடமைகளின் சிறந்த கலவை ‘சார்த்தி’, டி.எஸ்.சி நிறுவனம் வேலை வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

2022ல், நாடு தனது 75வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், அனைவரும் நாட்டிற்கு தங்களால் செய்ய இயன்ற விஷயத்தை செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

***