Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எஸ்டோனியா குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்

எஸ்டோனியா குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாரீசில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டிற்கிடையே எஸ்டோனியா குடியரசு அதிபர் திரு அலர் காரிசை சந்தித்தார். இது இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும்.

இந்தியாவிற்கும், எஸ்டோனியாவிற்கும் இடையிலான அன்பான நட்புறவு என்பது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம், பன்மைத்துவத்தின் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பகிரப்படும் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் மோடியும், அதிபர் காரிஸும் சுட்டிக்காட்டினார்கள். வர்த்தகம், முதலீடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு, கலாச்சாரம், சுற்றுலா, மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இணையப் பாதுகாப்புத் துறையில் நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்தியாவின் வளர்ச்சி குறித்த வாய்ப்புகளை ஆராயவும், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் எஸ்டோனிய அரசு மற்றும் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார்ந்த கூட்டாண்மையின் பின்னணியிலும் இந்தியா-எஸ்டோனியா கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்தியா-நார்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பில் அமைச்சக ரீதியிலான பரிமாற்றங்கள் தொடங்கப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்புக்கான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியாவிற்கும் எஸ்டோனியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக, எஸ்டோனியாவில் யோகா பிரபலமடைந்துள்ளதைப் பிரதமர் பாராட்டினார்.

—-

TS/IR/KPG/DL