உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு.ஷவுகத் மிர்சியோயேவ்–ன் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி நேற்று மாலை சமர்கண்ட் சென்றடைந்தார்.
சமர்கண்டில் பிரதமரை உஸ்பெகிஸ்தான் பிரதமர் திரு.அப்துல்லா அரிப்போவ் அன்புடன் வரவேற்றார். பல்வேறு அமைச்சர்கள், சமர்கண்ட் ஆளுநர், உஸ்பெகிஸ்தான் மூத்த அதிகாரிகளும் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இன்று காலை பிரதமர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதுடன் உஸ்பெகிஸ்தான் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்துவார். உச்சி மாநாட்டிற்கிடையே இதர நாடுகளின் தலைவர்கள் சிலரையும் அவர் சந்திப்பார்.
**************
(Release ID: 1859701)
Landed in Samarkand to take part in the SCO Summit. pic.twitter.com/xaZ0pkjHD1
— Narendra Modi (@narendramodi) September 15, 2022