பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய யோஜனா (ஏபி பிஎம்-ஜேஏஒய்) திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதார பாதுகாப்பு வழங்க ஒப்புதல் அளித்தது .
ஆறு (6) கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள், 5 லட்சம் ரூபாய் இலவச மருத்துவ காப்பீட்டுடன் குடும்ப அடிப்படையில் பயனடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்புதலின் மூலம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், AB PM-JAY-ன் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும். இத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தங்களுக்கு ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் பலனைப் பெறுவார்கள் (அவர்கள் 70 வயதிற்குட்பட்ட குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை). 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், குடும்ப அடிப்படையில் ஆண்டுக்கு ₹ 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), ஆயுஷ்மான் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதார காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களை ஏற்கனவே பெற்று வரும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தங்கள் தற்போதைய திட்டத்தை தேர்வு செய்யலாம் அல்லது AB PMJAY ஐ தேர்வு செய்யலாம். தனியார் சுகாதார காப்பீட்டு பாலிசிகள் அல்லது ஊழியர்களின் மாநில காப்பீட்டின் கீழ் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் AB PM-JAY-ன் கீழ் பலன்களைப் பெற திட்டம் தகுதியுடையதாகும்.
12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி தனிநபர்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்காக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ .5 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்கும். உலகின் மிகப்பெரிய அரசு நிதியளிக்கப்பட்ட சுகாதார உத்தரவாத திட்டமாகும். வயது வேறுபாடின்றி, தகுதியான அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 49 சதவீத பெண்கள் உட்பட 7.37 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளனர்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு காப்பீட்டின் விரிவாக்கம் முன்னதாக ஏப்ரல் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.
AB PM-JAY திட்டம், பயனாளிகளின் தளத்தில் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. ஆரம்பத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 10.74 கோடி ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. பின்னர், இந்திய அரசு, ஜனவரி 2022-ல், AB PM-JAY இன் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக திருத்தியது. இந்தியாவின் பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி 2011 மக்கள்தொகையை விட 11.7% ஆகும். நாடு முழுவதும் பணிபுரியும் 37 லட்சம் ஆஷாக்கள்/அங்கன்வாடி பணியாளர்கள்/அங்கன் உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச சுகாதார நலன்களை வழங்குவதற்காக இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஏபி பிஎம்-ஜேஏஒய் இப்போது நாடு முழுவதும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுக்குட்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ரூ .5 லட்சம் இலவச சுகாதாரப் பாதுகாப்பை வழங்கும்.
*******************
MM/RR/KV