Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவிப்பு


மூத்தத் தலைவர் திரு. லால் கிருஷ்ண அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. இதனைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது எக்ஸ் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.

திரு. எல்.கே. அத்வானியுடன் பேசிய திரு மோடி, இந்த கௌரவத்தைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“எல்.கே.அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவருடன் பேசி இந்த கௌரவத்தைப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நமது காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராகத் திகழ்பவர் அவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அடித்தள நிலையில் பணியாற்றுவதில் தொடங்கி, துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்தது வரையிலான வாழ்க்கை அவருடையது. நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் அவர் தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டார். அவரது நாடாளுமன்ற  தலையீடுகள் எப்போதும் முன்மாதிரியானவை, வளமான நுண்ணறிவு  நிறைந்தவை.

“பொது வாழ்க்கையில் அத்வானி  அவர்களின் பல தசாப்த  சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் குறிக்கப்படுகிறது, இது அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியான தரத்தை அமைக்கிறது. தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு அவர் இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பாரத  ரத்னா விருது வழங்கப்படுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அவருடன் உரையாடவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்.

—-

 

ANU/PKV/SMB/DL