எல்லைப் பாதுகாப்புப் படையின் குரூப் ஏ பிரிவு செயல் அதிகாரிகளுக்கான மறுசீராய்வுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் துணை கமாண்டண்டில் இருந்து கூடுதல் டிஜி ரேங்க் வரை 74 புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல் திறன் மற்றும் நிர்வாகத் திறன் வலுப்படுத்தப்படும்.
ஏற்கெனவே இருக்கும் 4109 பதவிகளை 4183 ஆக அதிகரித்தபின் இருக்கும் புதிய வடிவம் கீழ்க்காணுமாறு திருத்தி அமைக்கப்படுகிறது:
1, ஒரு கூடுதல் டிஜி பதவி அதிகரிப்பு (உயர் நிர்வாக அதிகாரி அளவில்)
2, இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரிவில் புதிதாக 19 பதவிகள் அதிகரிப்பு (மூத்த நிர்வாக அதிகாரி அளவில்)
3, டிஐஜி/கமாண்டெண்ட்/2 1 C பிரிவில் புதிதாக 370 பதவிகள் அதிகரிப்பு (இளநிலை நிர்வாக அதிகாரி பிரிவில்)
4, துணை கமாண்டெண்ட் பிரிவில் கூடுதலாக 14 பதவிகள் (இளநிலை அதிகாரி அளவில்)
5, இணை கமாண்டெண்ட் பிரிவில் கூடுதலாக 330 பதவிகள் (மூத்த அதிகாரி அளவில்)
பின்னணி:
இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்புப் பிரிவான எல்லைப் பாதுகாப்புப் படை 1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இந்தப் படையின் கீழ் மூன்று NDRF படைப்பிரிவுகள் உள்பட 186 படைப்பிரிவுகளில் 2,57,025 பேர் இருக்கிறார்கள். அவர்களில் குரூப் ஏ அதிகாரிகள் பிரிவில் மொத்தம் 4065 அதிகாரிகள் (ஐபிஎஸ் பிரிவையும் சேர்த்தால் 4109) இருக்கிறார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்திய பாகிஸ்தான் எல்லையிலும், இந்திய வங்கதேச எல்லையிலும்(வடகிழக்கு மாநிலங்கள் உள்பட), இடதுசாரி பயங்கரவாதம் அதிகம் உள்ள மாநிலங்களிலும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இதற்கு முன் 1990ல்தான் பணி நிலைக்கான சீராய்வு நடத்தப்பட்டது.