பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்காக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பு நிகழும். :
1) சந்தை சீர்திருத்தம், ஒழுங்குமுறைகள், மின்சக்தி பகிர்மானம் மற்றும் வழங்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துதல் ஒழுங்கமைவு மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல்
2) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு க்ரிட் இணைப்பு வழங்குதல்
3) திறனுள்ள எரிசக்தி கொள்கை மற்றும் செயலாக்கம், தொழிற்சாலைகளுக்கான எரிசக்தி திறன் மற்றும் வாகனங்களுக்கான எரிசக்தி திறன்.
4) கடல் காற்று மின்சக்தி மற்றும் சூரிய ஒளி மின்சக்தி
5) நவீன க்ரிட்டுகள்
6) எரிசக்தி சேமிப்பு மற்றும் புதிய எரிசக்தி தொழில்நுட்பங்கள்.
7) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிலையங்களின் திறனை அதிகரித்தல்.
8) க்ரிட் அல்லாத எரிசக்தி சேவைகளை வழங்குதல்
9) கடல் அலையில் இருந்து தயாரிக்கப்படும் எரிசக்தி
10) இது தவிர, ஒத்துழைப்பு தேவைப்படும் துறைகளென்று சம்பந்தப்பட்டவர்களால் கண்டறியப்படும் துறைகள்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப உதவி, மானியம், பரஸ்பரம் ஒப்புக் கொண்ட இதர ஒத்துழைப்பு மற்றும் இங்கிலாந்தால் துவக்கப்படும் திட்டங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ள வகை செய்யும். அவ்வப்போது திட்டத்துக்கேற்றார்ப் போன்ற ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படும். மின்சக்தி சந்தை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை க்ரிட்டோடு இணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாகவும், எரிசக்தியில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்தவும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்காகவும், மாநில மற்றும் மத்திய அரசு அளவில் இந்த ஒப்பந்தம் செயல்படும்.