Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்கள், பழங்குடியினர் விருந்தினர்கள் ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் அலங்கார ஊர்தி கலைஞர்கள், பழங்குடியினர் விருந்தினர்கள் ஆகியோரை பிரதமர் இன்று (24.01.2019) புதுதில்லியில் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் வரவேற்றார்.

குடியரசுத் தின அணிவகுப்பு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றமைக்காக அவர்களை பாராட்டிய பிரதமர், இந்த வாய்ப்பு அவர்களது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய ஒன்று என்று கூறினார். இவர்களிடமிருந்து நாட்டு மக்கள் அனைவருமே உத்வேகம் பெறுவதாக அவர் கூறினார்.

அன்றாட வாழ்க்கையில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தேசிய மாணவர் படையில் ஒழுக்கம் ஒரு முதல் நெறியாக இருப்பதை சுட்டிக்காட்டினார். குடிமக்கள் அனைவரும் அனைத்து சமயங்களிலும் தங்களது சமுதாய கடமைகள் குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென அவர் கூறினார். இதனுடன் மக்களின் உயர்ந்த இலட்சியமும் இணைந்தால் இந்தியா மிக உயர்ந்த உன்னத நிலையை அடையும் என்றார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, நடைபெற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்.

***