Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை


என்டீடிவி உலக உச்சி மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைத்து மதிப்புமிக்க விருந்தினர்களையும் நான் வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாட்டில் நீங்கள் பல்வேறு தலைப்புகளில் விவாதிப்பீர்கள், மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உலகத் தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
நண்பர்களே, 
கடந்த 4-5 ஆண்டுகளை நாம் பார்த்தால், ஒரு பொதுவான கருப்பொருள் பெரும்பாலான விவாதங்களில் மையமாக உள்ளது. கவலை – எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கொரோனா காலத்தில், உலகளாவிய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்ற கவலை இருந்தது. கோவிட் பரவியதால், உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்தன. தொற்றுநோயானது பணவீக்கம், வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய கவலைகளை அதிகரித்தது. பின்னர், ஏற்பட்ட போர்கள் விவாதங்களையும் கவலைகளையும் தீவிரப்படுத்தின. உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் அப்பாவி உயிர்களின் இழப்பு குறித்து கவலை இருந்தது. இந்தப் பதட்டங்கள், மோதல்கள் மற்றும் அழுத்தங்கள் உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகளாக மாறின. உலகளாவிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது. 
நண்பர்களே 
தற்போது, ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி வரும் வேகமும், அளவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. பாரதத்தின் வேகமும் அளவும் ஈடு இணையற்றது. எங்கள் அரசு தனது மூன்றாவது பதவிக்காலத்தின் சுமார் 125 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த 125 நாட்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 125 நாட்களில், ஏழைகளுக்காக 3 கோடி புதிய உறுதியான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 125 நாட்களில், 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். 125 நாட்களில், 15 புதிய வந்தே பாரத் ரயில்களை நாங்கள் இயக்கியுள்ளோம், 8 புதிய விமான நிலையங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே 125 நாட்களில், நாங்கள் இளைஞர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு உதவித் தொகுப்பை வழங்கியுள்ளோம், 21,000 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியுள்ளோம், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நோக்கத்தைப் பாருங்கள் – 125 நாட்களுக்குள், 5 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற இயக்கத்தின் கீழ், 90 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், 125 நாட்களில் 12 புதிய தொழில்துறை முனைகளுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். இந்த 125 நாட்களில், நமது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 6 முதல் 7 சதவீதம் வரை வளர்ந்துள்ளன. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 650 பில்லியன் டாலரில் இருந்து 700 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. 
நண்பர்களே, 
இந்தியாஇன்று வளரும் நாடாகவும், வளர்ந்து வரும் சக்தியாகவும் உள்ளது. முன்னேற்றத்திற்கான பாதையை எவ்வாறு அமைப்பது என்பதையும் நாங்கள் அறிவோம். 
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தனது இலக்குகளை இந்தியாநிர்ணயித்தது. ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ குறித்த விவாதங்கள் இப்போது நமது உணர்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. 
நண்பர்களே,
தற்போது, இந்த நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டாக மாற்றுவதில் முக்கியமான மற்றொரு நன்மையும் பாரதத்திற்கு உள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் சகாப்தம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உலகின் நிகழ்காலமும் எதிர்காலமும் இதனுடன்  பிணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா இரட்டை செயற்கை நுண்ணறிவு சக்தியின் நன்மையைக் கொண்டுள்ளது.
நண்பர்களே,
விரைவான நேரடி போக்குவரத்து மற்றும் உள்ளடக்கிய போக்குவரத்து ஆகியவற்றில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இன்றுடன் உடான் திட்டம் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. உடான் திட்டத்தின் கீழ், நாங்கள் இரண்டு பகுதிகளில் பணியாற்றினோம். முதலாவதாக, 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் புதிய விமான நிலையங்களை உருவாக்கினோம். இரண்டாவதாக, விமானப் பயணத்தை  குறைந்த கட்டணத்தில் அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றினோம். உடான் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 300,000 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 1.5 கோடி சாமானிய குடிமக்கள் பயணம் செய்துள்ளனர். தற்போது, உடானின் கீழ் 600 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இயங்குகின்றன, அவற்றில் பெரும்பாலானவை சிறிய நகரங்களை இணைக்கின்றன. 2014-ம் ஆண்டில், இந்தியா சுமார் 70 விமான நிலையங்களை மட்டுமே கொண்டிருந்தது; 
நண்பர்களே,
நாட்டின் இளைஞர்கள் தொடர்பான சில உதாரணங்களை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். பாரதத்தின் இளைஞர்களை உலக வளர்ச்சியை ஊக்குவிக்கும் சக்தியாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதனால்தான் கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்த அம்சங்களில்  நாங்கள் செய்த பணிகளின் முடிவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு, டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை வெளியிடப்பட்டது. மேலும், ஆராய்ச்சி தரத்தில் அதிக முன்னேற்றம் கண்ட நாடு பாரதம். கடந்த 8-9 ஆண்டுகளில், இந்தியப் பல்கலைக்கழகங்களின் பங்கேற்பு 30 முதல் 100 ஆக உயர்ந்துள்ளது.
நண்பர்களே,
பாரதத்தின் வளர்ந்து வரும் திறன்கள் உலகின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா எந்த அளவுக்கு முன்னேறுகிறதோ, அந்த அளவுக்கு உலகம் நன்மை அடையும். பாரதத்தின் நூற்றாண்டு பாரதத்தின் வெற்றியாக மட்டுமே இருந்துவிடக்கூடாது, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வெற்றியாகவும் அது இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். என்னை இங்கு அழைத்ததற்காகவும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும் என்டீடிவிக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உச்சிமாநாடு வெற்றிபெற எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி

 

——
 

PS/IR/KPG/KV/DL