Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எனது இதயத்தில் ராஜ்கோட் எப்போதும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும்: பிரதமர்


ராஜ்கோட் உடனான தனது தொடர்பை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, 22 ஆண்டுகளுக்கு முந்தைய தமது எக்ஸ் பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.

சரியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு, 2002 பிப்ரவரி 24 அன்று, ராஜ்கோட் II தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக குஜராத் சட்டமன்றத்திற்குள் நுழைந்த ஒரு சிறப்பு தருணத்தை பிரதமரின் பெயரிலான ஆவண இடுகை நினைவு கூர்கிறது.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ராஜ்கோட் எப்போதும் என் இதயத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெறும். இந்த நகர மக்கள்தான் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு தேர்தலில் முதல் வெற்றியை அளித்தனர். அப்போதிருந்து, பொதுமக்களின் பெரும்பான்மையான விருப்பங்களுக்கு நீதி வழங்க எப்போதும் நான் பணியாற்றி வருகிறேன். இன்றும் நாளையும் நான் குஜராத்தில் இருப்பேன் என்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு, அதில் ஒன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது, அங்கிருந்து 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.”

*******

AD/BS/DL