Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எண்ணெய் வயல்கள் (முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம் 1948-ல் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நிறைவேற்றியதற்கு பிரதமர் பாராட்டு


மாநிலங்களவையில் இன்று எண்ணெய் வயல்கள் (முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம் 1948-ல் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நிறைவேற்றியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது எரிசக்தி பாதுகாப்பை ஊக்குவிப்பதுடன், வளமான இந்தியாவுக்கு பங்களிக்கும் ஒரு முக்கியமான சட்டம் என்று அவர்  கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி  கூறியிருப்பதாவது:

“இது ஒரு முக்கியமான சட்டமாகும், இது எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதுடன், வளமான இந்தியாவுக்கும் பங்களிக்கும்.”

***