பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, புவனேஸ்வர், காந்திநகர், ஐதராபாத், இந்தூர், ஜோத்பூர், மண்டி, பாட்னா மற்றும் ரோப்பார் ஆகியவற்றில் எட்டு புதிய ஐ.ஐ.டி-க்களை அமைப்பதற்கான திருத்திய நிதி மதிப்பீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எட்டு புதிய ஐ.ஐ.டிக்கள் அமைத்திட 2008-09 முதல் 2018-19 வரையிலான 11 ஆண்டுகளுக்கான திருத்திய நிதி மதிப்பீடு ரூ.13,990 கோடி ஆகும். இதன் உண்மையான திட்ட மதிப்பீடு ரூ.6080 கோடி ஆகும். காலம் மற்றும் விலையேற்றம் காரணமாக இந்த செலவினம் ரூ.7910 கோடி உயர்ந்துள்ளது.
திட்ட முடிவில், ஒவ்வொரு ஐ.ஐ.டி.-யிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2360 ஆக இருக்கும். இந்த எட்டு ஐ.ஐ.டி.களிலும் 11வது வருட முடிவில், அதாவது மார்ச், 2019-ல் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 12880 ஆக இருக்கும்.
நேரடியாக பயனாளிகளின் எண்ணிக்கை 12880 ஆக இருக்கும். எனினும், இந்த எட்டு புதிய ஐ.ஐ.டி.-க்கள் ஆய்வு புத்தகங்கள் மற்றும் ஆய்வு தாள்களை வெளியிடுதல், பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகள்/குறியீடுகள்/வடிவமைப்புகள், தரம் உயர்த்துதல் திட்டங்கள் போன்றவற்றில் அளவு மற்றும் தரத்தில் மறைமுகமாக வளர்ச்சியை ஏற்படுத்தும். இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் பொருளதார தேவைக்கேற்ப திறனுட்ப மனிதவள தேவைகளை இப்புதிய நிறுவனங்களில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யும், இது தவிர, அளவான உள்கட்டமைப்புடன் கூடிய இந்நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சூழ்நிலைகளை அளிப்பதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான சிறந்த பயிற்றுநர்களை அளிக்கும்.
ஐ.ஐ.டி.-க்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக இருப்பதுடன் உலகளாவிய புகழையும் பெற்றுள்ளது. ஐ.ஐ.டி.யில் பொருட்கள் மிகவும் உயர்வாக மதிக்கப்படுவதோடு, தேசத்திற்கு மிகச் சிறந்த புகழை தேடி தந்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம், செல்வம் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் முன்னாள் மாணவர்கள் பெரும் வகித்துள்ளார்கள். இது தவிர, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் உரிமையாளர் உணர்வு போன்றவற்றின் மூலம் ஐ.ஐ.டி.க்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
பின்னணி:
2008, ஜூலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புவனேஸ்வர், காந்திநகர், ஐதராபாத், இந்தூர், ஜோத்பூர், மண்டி, பாட்னா மற்றும் ரோப்பார் ஆகியவற்றில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் அமைச்சரவை ஒப்புதல்படி எட்டு புதிய ஐ.ஐ.டி.-க்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் மொத்தம் ரூ.760 கோடி மதிப்பீட்டில், எட்டு புதிய ஐ.ஐ.டி.-க்களும் மொத்தம் ரூ.6080 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.