வர்த்தகம்
பிம்ஸ்டெக் வர்த்தக சபையை நிறுவுதல்.
ஒவ்வொரு ஆண்டும் பிம்ஸ்டெக் வர்த்தக உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துதல்.
பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு.
தகவல் தொழில் நுட்பம்
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் (டிபிஐ) அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் பிம்ஸ்டெக் நாடுகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்குமான முன்னோடி ஆய்வு.
பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் யுபிஐ-க்கும் பிற கட்டண அமைப்புகளுக்கும் இடையேயான இணைப்பு.
பேரிடர் மேலாண்மை
பேரிடர் மேலாண்மை, நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றில் ஒத்துழைக்க இந்தியாவில் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை சிறப்பு மையத்தை நிறுவுதல்.
பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை ஆணையங்களுக்கு இடையிலான நான்காவது கூட்டுப் பயிற்சிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும்.
பாதுகாப்பு
இந்தியாவில் உள்துறை அமைச்சர்கள் அமைப்பின் முதல் கூட்டத்தை நடத்துதல்
விண்வெளி
பிம்ஸ்டெக் நாடுகளுக்கு மனிதவள பயிற்சிக்கான நிலையங்களை அமைத்தல். நானோ செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்து செலுத்துதல், தொலையுணர்வுத் தரவுகளைப் பயன்படுத்துதல்.
திறன் மேம்பாடும் பயிற்சியும்
போதி எனப்படும் மனித வள உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான கட்டமைக்கப்பட்ட பிம்ஸ்டெக் முன்முயற்சி. இதன் கீழ், பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த 300 இளைஞர்களுக்கு இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிம்ஸ்டெக் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டத்தை விரிவுபடுத்துதல்.
பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த இளம் தூதரக அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சித் திட்டம்.
பிம்ஸ்டெக் நாடுகளில் புற்றுநோய் பராமரிப்பில் பயிற்சி, திறன் வளர்ப்புக்கு டாடா நினைவு மையம் உதவும்.
பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையத்தை நிறுவுதல்
விவசாயிகளின் நலனுக்காக அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகள் பகிர்வு, ஆகியவற்றுடன் ஆராய்ச்சி திறன் மேம்பாட்டிற்கென இந்தியாவில் ஒப்புயர்வு மையம் அமைத்தல்.
எரிசக்தி
பெங்களூருவில் பிம்ஸ்டெக் எரிசக்தி மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.
மின்சார கிரிட் உள்ளிணைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுதல்
இளைஞர் ஈடுபாடு
பிம்ஸ்டெக் இளம் தலைவர்கள் உச்சி மாநாடு இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
பிம்ஸ்டெக் ஹேக்கத்தான், இளம் தொழில்முறை பார்வையாளர்கள் திட்டம் ஆகியவை தொடங்கப்படும்.
விளையாட்டு
இந்த ஆண்டு இந்தியாவில் ‘பிம்ஸ்டெக் தடகளப் போட்டி’யை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2027-ம் ஆண்டில் முதல் பிம்ஸ்டெக் விளையாட்டுகளை நடத்துதல்
பண்பாடு
பிம்ஸ்டெக் பாரம்பரிய இசை விழா இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது
போக்குவரத்து இணைப்பு
திறன் வளர்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, கடல்சார் கொள்கைகளில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த இந்தியாவில் நிலையான கடல்சார் போக்குவரத்து மையத்தை நிறுவுதல்.
—-
(Release ID 2118698)
TS/PLM/KPG/SG