Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எச்.எம்.டி கடிகார நிறுவனத்தின் நில பரிமாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கனரக தொழிற்சாலைகளுக்கான கீழ்கண்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

i. எச்.எம்.டி கடிகார நிறுவனத்திற்கு சொந்தமான 208.35 ஏக்கர் அளவுள்ள பெங்களூரூ மற்றும் தும்கூர் நிலங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (ISRO) ரூ.1194,21 கோடிக்கு (வரிகள் தனி) அளிப்பது.

ii. பெங்களூருவில் ஒரு ஏக்கர் அளவுக்கு உள்ள (குளோபல் வேர்ஹவுஸ்) எச்.எம்.டி நிலத்தை இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்திற்கு (GAIL) ரூ.34.30 கோடிக்கு (வரிகள் தனி) அளிப்பது.

இந்த விற்பனையில் இருந்து வரும் தொகை, உடனடி வரி விதிப்புகளுக்குப் பிறகு அரசு கடன் மற்றும் முன்பண கணக்கில் நிறுவனத்தால் செலுத்தப்படும்.

பின்னணி:

ஒருகாலத்தில் இந்தியாவின் முன்னணி கடிகார தயாரிப்பு நிறுவனமாக இருந்த எச்.எம்.டி கடிகார நிறுவனம் இந்தியாவின் கடிகாரம் என்றழைக்கப்பட்டது. ஆனால் நஷ்டம் மற்றும் தற்கால போட்டு சூழலில் தன்னை புதுப்பித்துக்கொள்ள முடியாத நிலையில் தனது இயக்கத்தை நிறுத்தியது. ஜனவரி 2016ல் எடுக்கபப்ட்ட இந்த முடிவு அனைத்து பணியாளர்களுக்கும் நல்லதொரு ஓய்வூதிய திட்ட அறிவிப்போடு எடுக்கப்பட்டது. பெங்களூரு மற்றும் தும்கூர் ஊழியர்கள் அரசினால் வழங்கப்பட்ட இந்த சலுகை திட்டத்தை பயன்படுத்தி மகிழ்ச்சிகரமாக பணி ஓய்வு பெற்றார்கள்.

எச்.எம்.டிக்கு சொந்தமான பெங்களூரு மற்றும் தும்கூர் நிலங்களை இஸ்ரோ மற்றும் கெய்ல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய எடுக்கப்பட்ட முடிவு அந்நிலங்களை சிறந்த முறையில், பொதுமக்களுக்கு பயன்படும் நோக்கில் எடுக்கப்பட்டது.

***