Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எங்கள் நாட்டில் முதலீடு செய்ய உலக நாடுகளை வரவேற்கிறோம். இந்தியா ஏமாற்றம் அளிக்காது: பிரதமர்


முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதாக தொழில்முனைவோர் மத்தியில் உள்ள நம்பிக்கையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  சுட்டிக்காட்டினார். 
எழுத்தாளரும், தொழில்முனைவோருமான திரு எஸ். பாலாஜி,  இந்தியாவை ஒரு பண்டைய நாகரிகம் என்றும்,  அதே வேளையில் ஒரு  புத்தொழில் போன்ற நாடு என்றும், இந்தியாவின் திறனைப் பற்றி  சமூக ஊடக எக்ஸ்   தளத்தில் பேசியுள்ளார். 
அவருக்குப் பதிலளித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“உங்கள் நம்பிக்கையை நான்  பாராட்டுகிறேன. மேலும், இந்திய மக்கள் புதுமை என்று வரும்போது டிரெண்ட் செட்டர்களாகவும், முன்னோடிகளாகவும் திகழ்கிறார்கள். 
எங்கள் நாட்டில் முதலீடு செய்ய உலக நாடுகளை வரவேற்கிறோம். இந்தியா ஏமாற்றம் அளிக்காது.”

 

PKV/BR/KRS