Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியையொட்டி நவம்பர் 3-ம் தேதியன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்


மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, புதுதில்லி விக்யான் பவனில் நவம்பர் 3-ம் தேதியன்று பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில்  பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் புதிய புகார் மேலாண்மை முறை இணையதளத்தை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார். குடிமக்களுக்கு அவர்களுடைய புகார்கள் குறித்த அவ்வப்போதைய நிலை மற்றும் தகவல்களை இந்த இணையதளம் அளிக்கும். அத்துடன் நெறிமுறைகள் மற்றும் நல்ல நடைமுறை  என்ற தலைப்பிலான படக்காட்சிகளுடன் கூடிய புத்தகத்தையும் அவர் வெளியிட உள்ளார். ஊழல் தடுப்புக்கான சிறந்த நடைமுறைகள் குறித்த தொகுப்பு நூலையும்  விக்ய-வானி  என்ற சிறப்பிதழையும் அவர் வெளியிட உள்ளார்.

வாழ்க்கையின் அனைத்து சூழல்களிலும், ஒருங்கிணைப்பு என்ற அம்சத்தை அனைத்துத் தரப்பினரிடையே பரப்பிடும் வகையில்,  ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் கடைபிடிக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக ஊழல் இல்லாத இந்தியா என்ற தலைப்பில்  அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ம் தேதி வரை இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.   ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் என்ற தலைப்பில், நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் நடத்திய கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரை எழுதிய 5 மாணவர்களுக்கு பிரதமர், பரிசு வழங்க உள்ளார்.

************** 

SM/IR/KPG/IDS