Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்தார்.

உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல் உச்சிமாநாட்டில் உஸ்பெகிஸ்தான் பங்கேற்றதற்காக அதிபர்  திரு மிர்சியோயேவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி, மருந்துப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். உஸ்பெகிஸ்தானுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஆதரவை வழங்குவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

******

ANU/AD/PLM/DL