Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஸ்தாத் ரஷீத் கான் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


இந்தியப் பாரம்பரிய இசை உலகின் தலைசிறந்த ஆளுமையான உஸ்தாத் ரஷீத் கானின் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

இந்தியப் பாரம்பரிய இசை உலகின் புகழ்பெற்ற ஆளுமையான உஸ்தாத் ரஷீத் கானின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது ஈடு இணையற்ற திறமையும், இசை மீதான அர்ப்பணிப்பும், நமது கலாச்சார உலகை வளப்படுத்தியதுடன்பல தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளித்தது. அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது, அதை நிரப்புவது கடினம். அன்னாரது குடும்பத்தினருக்கும், சீடர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID: 1994701)

ANU/SMB/BR/AG