Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, மாற்றத்தை ஏற்படுத்தும் அம்சம் என்பதை நிரூபித்து வருகிறது: பிரதமர்


இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தி மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி  உறுதிப்பட வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து குறித்து மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் எழுதிய கட்டுரை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், உள்நாட்டு நீர்வழித் தடங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து முறையாக உருவெடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.

இது பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

“2014-ம் ஆண்டுக்குப் பிறகு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து முறையாகவும் உருவெடுத்து வருகிறது என்பதை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் (@sarbanandsonwal) விவரிக்கிறார்.”

https://www.thehindubusinessline.com/opinion/unleashing-indias-riverine-potential/article67424205.ece

***

 

SMB/ANU/PLM/RS/KPG