Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதை ஊக்குவிக்க அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கீழ்கண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

நான்கு மருத்துவ உபகரண பூங்காக்களில் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ 400 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண பூங்கா ஊக்குவிப்பு திட்டம்.

உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதை ஊக்குவிக்க ரூ3,420 கோடி மதிப்பில் தயாரிப்புச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்.

மேற்கண்ட திட்டங்களுக்காக வரும் ஐந்தாண்டுகளில், அதாவது 2020-21 முதல் 2024-25 வரை, இந்த தொகை செலவிடப்படும்.