Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் வாழ்த்து


பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர்  அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை நமது அற்புதமான  மகளிர் அணி கொண்டு வந்ததால் இந்தியாவுக்கு பெருமையான தருணம். நமது சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த சிறந்த முடிவுக்கு வழிவகுத்துள்ளது.

***

SM/PKV/DL