. உலக வங்கித் தலைவர் திரு. ஜிம் யாங் கிம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஸ்மார்ட் நகரங்கள், தூய்மை கங்கா, திறன் மேம்பாடு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம் போன்ற முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக பிரதமர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். வளர்ச்சி பாதையில் இந்த திட்டங்கள் மூலம் லட்சிய இலக்குகளை எட்டும் முயற்சி தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக திரு. கிம் கூறினார்.
நீடித்திருக்கக்கூடிய சுற்றுச்சூழல் கொண்ட பாதையை பின்பற்றி வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையான அளவு பருவநிலை மாற்ற நிதி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறித்தினார். இந்த செயற்பாட்டை உலக வங்கி முழுமையாக ஆதரிக்கும் என்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு. கிம் உறுதி அளித்தார்.
தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் இந்தியாவின் முயற்சியை திரு. கிம் பாராட்டினார்.
மேலும் பிரதமரும் திரு. கிம் அவர்களும் பன்முக விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
Met @WorldBank President @JimYongKim & discussed ways to deepen India’s engagement with the World Bank. https://t.co/5yfW1e8BZK
— Narendra Modi (@narendramodi) June 30, 2016