Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

 உலக தண்ணீர் தினத்தன்று நீர் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்


நீரைச் சேமிப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மனித நாகரிகத்தில் நீரின் முக்கிய பங்கைக் குறிப்பிள்ள அவர், எதிர்காலச் சந்ததியினருக்காக இந்த விலைமதிப்பற்ற வளத்தை பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது;

“உலக தண்ணீர் தினத்தில், தண்ணீரைப் பாதுகாப்பதற்கும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் நாம் உறுதியளிக்கிறோம். நீர் நாகரிகங்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. எனவே எதிர்காலச் சந்ததியினருக்கு அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது!”.

***

PKV/KV