Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுற்றுலா தினத்தை ஒட்டி வியத்தகு இந்தியாவின் அழகைக் கண்டறிய வருமாறு பிரதமர் மக்களுக்கு அழைப்பு


இந்தியாவிற்கு வந்து அதன் அழகைக் கண்டறியுமாறு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். நாடு முழுவதிலும் சென்று பார்த்து அதன் பன்முகத் தன்மையைக் கண்டறியுமாறு இந்திய இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

“உலக சுற்றுலா தினத்தில், இந்தியாவிற்கு வந்து நம்பற்கரிய அதன் அழகையும், மக்களின் விருந்தோம்பலையும் கண்டறிய உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என பிரதமர் குறிப்பிட்டார்.

“எனது இளம் நண்பர்களை இந்தியா முழுவதும் பயணம்  செய்யுங்கள் என்றும் உயிர்த்துடிப்புள்ள நமது நாட்டின் பன்முகத் தன்மையை நேரடியாகக் கண்டுகளிக்குமாறும் நான் குறிப்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.”

கடந்த ஞாயிறன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியின் 36வது நிகழ்வின்போது சுற்றுலாவைப் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தான் கூறிய விஷயங்கள் அடங்கிய ஒரு செய்திச் சுருளையும் பிரதமர் இந்தச் செய்தியுடன் பகிர்ந்து கொண்டார்.

https://soundcloud.com/narendramodi/unity-in-diversity-is-indias-speciality 

 

***