Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுகாதார தினத்தையொட்டி ஆரோக்கியமான உலகைக் கட்டமைப்பதற்கான கடப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்


உலக சுகாதார தினத்தையொட்டி ஆரோக்கியமான உலகைக் கட்டமைப்பதற்கான கடப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிபடுத்தியுள்ளார். சுகாதாரப் பராமரிப்பில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், மக்களின் நல்வாழ்வின் பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்யும் என்றும் திரு மோடி கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு செழிப்பான சமூகத்திற்கும் அடித்தளமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“உலக சுகாதார தினத்தில், ஆரோக்கியமான உலகைக் கட்டமைப்பதற்கான நமது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். எங்களுடைய அரசு சுகாதாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், மக்களின் நல்வாழ்வின் பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்யும். நல்ல ஆரோக்கியம்தான் ஒவ்வொரு செழிப்பான சமூகத்தின் அடித்தளம்!”

***

(Release ID: 2119639)
TS/IR/RR/KR