Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள செய்தி


உலக சுகாதார தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி வருமாறு :

“உலக சுகாதார தினமான இன்று, நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்வதுடன், கொவிட்-19 அச்சுறுத்துலுக்கு எதிரான போரில், துணிச்சலாக முன்னணியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வோம்.

இந்த உலக சுகாதார நாளில், நமது உயிரையும், மற்றவர்களின் உயிர்களையும் பாதுகாக்கும் சமூக இடைவெளி போன்றவற்றை நாம் பின்பற்ற உறுதி மேற்கொள்வோம். ஆண்டு முழுவதும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வகையில், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த ஊக்குவிப்பாக இந்த நாள் அமையட்டும்’’

***