Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு


உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  தனது கடைசி பயணத்தின் போது தலைமை இயக்குநரை ‘துளசி பாய்’ என்ற பெயரில் அழைத்தது போல், திரு மோடி, டாக்டர் டெட்ரோசை அப்பெயரிலேயே அழைத்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் 2023 ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் டாக்டர் டெட்ரோஸ் பங்கேற்கிறார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“என் நல்ல நண்பர் துளசி பாய் நவராத்திரிக்கு நன்றாக தயாராகிவிட்டார்! இந்தியாவுக்கு வருக, @DrTedros!”

***

AD/ANU/IR/RS/GK