Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிக்குப் பிரதமர் மகிழ்ச்சி


உலக அளவில் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கான மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் (மேக் இன் இந்தியா) திட்டம் இந்திய பொருளாதாரத்தை உலக அரங்கில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பதை திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள், உலக அளவில் பெற்ற தனித்துவமான வெற்றியை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யும் முன்முயற்சி குறித்து மைகவ் இந்தியா தளத்தின் (MyGovIndia)  சமூக ஊடக எக்ஸ் தள பதிவுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

“மேக் இன் இந்தியா திட்டம் இந்தியப் பொருளாதாரத்தை உலக அரங்கில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பதைக் எடுத்துக் காட்டும் ஒரு விரிவான பார்வை இது!”

*** 

PLM/KV