ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். “எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்” என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்றார். இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10 நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், நிர்வாகத்தின் தன்மை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை அவர் எடுத்துரைத்தார். நலன், உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்த இந்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நிர்வாகத்திற்கான மனிதநேய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை அடைய மக்களின் பங்கேற்பு, அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்களைச் சென்றடையச் செய்தல், மகளிர் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தன்மையைக் கருத்தில் கொண்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அரசுகள் ஒத்துழைத்து ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப ரீதியான, தூய்மையான வெளிப்படையான, பசுமையான அம்சங்கள் தற்போதைய நிர்வாகத்தின் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். இந்தச் சூழலில், அரசுகள் பொதுச் சேவையில் தங்களது அணுகுமுறையில், எளிதான வாழ்க்கைமுறை, எளிதான நீதி, எளிதான போக்குவரத்து, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்குதல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை விவரித்த அவர், நீடித்த உலகை உருவாக்க இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தில் மக்கள் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். இந்தச் சூழலில், உலகளாவிய தென்பகுதி நாடுகள் எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறித்த கவலைகளை உலகளாவிய விவாதத்தின் மைய அரங்கிற்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்று அழைப்பு விடுத்த அவர், முடிவெடுப்பதில் உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “உலக நாடுகளின் நண்பன்” என்ற தனது பங்கின் அடிப்படையில் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
—-
(Release ID: 2005945)
ANU/PKV/IR/KPG/KRS
Addressing the @WorldGovSummit in Dubai. https://t.co/LbnkRo2sbO
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
आज हम 21वीं सदी में हैं।
— PMO India (@PMOIndia) February 14, 2024
एक तरफ दुनिया आधुनिकता की तरफ बढ़ रही, तो पिछली सदी से चले आ रहे चैलेंजेस भी उतने ही व्यापक हो रहे हैं: PM pic.twitter.com/0X9P0amW4o
आज विश्व को ऐसी सरकारों की जरूरत है जो Inclusive हों, जो सबको साथ लेकर चले। pic.twitter.com/ZGCaUGq9pd
— PMO India (@PMOIndia) February 14, 2024
Today, the world needs governments that prioritise:
— PMO India (@PMOIndia) February 14, 2024
Ease of Living,
Ease of Justice,
Ease of Mobility,
Ease of Innovation,
Ease of Doing Business. pic.twitter.com/eZFyvfrH7U
मैं मानता हूं कि सरकार का अभाव भी नहीं होना चाहिए और सरकार का दबाव भी नहीं होना चाहिए।
— PMO India (@PMOIndia) February 14, 2024
बल्कि मैं तो ये मानता हूं कि लोगों की ज़िंदगी में सरकार का दखल कम से कम हो, ये सुनिश्चित करना भी सरकार का काम है: PM pic.twitter.com/TlfAe2t8Zy
Minimum Government, Maximum Governance. pic.twitter.com/X3wALW9pj0
— PMO India (@PMOIndia) February 14, 2024
सबका साथ-सबका विकास के मंत्र पर चलते हुए हम Last Mile Delivery और सैचुरेशन की अप्रोच पर बल दे रहे हैं: PM pic.twitter.com/mnOzTaRkeX
— PMO India (@PMOIndia) February 14, 2024
Mitigating climate change. pic.twitter.com/mxEXR7QB5l
— PMO India (@PMOIndia) February 14, 2024
In the midst of global challenges, we need governments which are… pic.twitter.com/a3OhAU8TSq
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
Here is how India has ignited several mass movements over the last decade thus benefitting crores of people. pic.twitter.com/yNP9Jl6IoP
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
Our Governance never discriminates against anyone. There is no room for corruption too. pic.twitter.com/w1sUBocjzZ
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
India’s approach to climate change… pic.twitter.com/OhFO54gVzr
— Narendra Modi (@narendramodi) February 14, 2024