மேன்மை தங்கிய தலைவர்களே!
உங்களது எண்ணங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி! இது உண்மையிலேயே பயனுள்ள கருத்துக்கள் மற்றும் யோசனைகளின் பரிமாற்றமாக உள்ளது. இது உலகின் தென்பகுதி நாடுகளின் பொதுவான அபிலாஷைகளை பிரதிபலித்தது.
உலகம் எதிர்கொள்ளும் பல முக்கியமான பிரச்சினைகளில், வளரும் நாடுகள் ஒரே மாதிரியான முன்னோக்குகளைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது.
இது இன்றிரவு விவாதங்களில் மட்டுமல்ல, இந்த ‘உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல்’ கடந்த இரண்டு நாட்களாகவும் காணப்பட்டது.
தென்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கியமான இந்த யோசனைகளில் சிலவற்றைச் சுருக்கமாகக் கூற முயற்சிக்கிறேன்.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம், மேலும் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை கூட்டாக வடிவமைப்போம்.
சுகாதாரத் துறையில், பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்புக்கான பிராந்திய மையங்களை உருவாக்குதல், சுகாதார நிபுணர்களின் பணிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாம் ஒற்றுமையான கருத்துக்களை கொண்டுள்ளோம். டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை விரைவாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம்.
கல்வித் துறையில், தொழில் பயிற்சி மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் நமது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் அனைவரும் பயனடையலாம்.
வங்கி மற்றும் நிதித் துறையில், டிஜிட்டல் பொதுப் பொருட்களைப் பயன்படுத்துதல், வளரும் நாடுகளில் நிதி உள்ளடக்கத்தை அதிக அளவில் மற்றும் வேகத்தில் அதிகரிக்க முடியும். இந்தியாவின் சொந்த அனுபவம் இதை நிரூபித்துள்ளது.
இணைப்பு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை நாம் பல்வகைப்படுத்த வேண்டும், மேலும் வளரும் நாடுகளை இந்த மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பம் மீதான தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை என்று நம்புவதில் வளரும் நாடுகள் ஒன்றுபட்டுள்ளன.
உற்பத்தியில் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, ‘யூஸ் அண்ட் த்ரோ‘ நுகர்விலிருந்து விலகி, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வாழ்க்கை முறைகளை நோக்கிச் செல்வதும் சமமாக முக்கியமானது என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம்.
இதுவே இந்தியாவின் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை‘ அல்லது லைஃப் முன்முயற்சியின் பின்னணியில் உள்ள மையத் தத்துவம் – இது கவனமுள்ள நுகர்வு மற்றும் வட்டப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது.
தலைவர்களே,
இந்த உச்சிமாநாட்டில்பகிர்ந்து கொள்ளப்படும் இந்த யோசனைகள் அனைத்தும், ஜி20 நிகழ்ச்சி நிரலை வடிவமைக்க இந்தியா முயற்சிக்கும் போது உத்வேகத்தை அளிக்கும்.
உங்களது நேரத்தை ஒதுக்கி கலந்து கொண்டதுடன், மதிப்புமிக்க கருத்துக்களைத் தெரிவித்ததற்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
*****
PKV / DL
"Voice of Global South Summit" has seen fruitful deliberations. My remarks at the closing ceremony. https://t.co/qoGyiHroKl
— Narendra Modi (@narendramodi) January 13, 2023
We all agree on the importance of South-South Cooperation and collectively shaping the global agenda. pic.twitter.com/23cu1uqz8l
— PMO India (@PMOIndia) January 13, 2023
— PMO India (@PMOIndia) January 13, 2023
— PMO India (@PMOIndia) January 13, 2023
India’s ‘Lifestyle For Environment’ or LiFE initiative focuses on mindful consumption and circular economy. pic.twitter.com/A1YG9oL8Ll
— PMO India (@PMOIndia) January 13, 2023