Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ என்பது பற்றிய சிறப்புரையைப் பிரதமர் நிகழ்த்தினார்

உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ என்பது பற்றிய சிறப்புரையைப் பிரதமர் நிகழ்த்தினார்


உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ என்பது பற்றி இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் சிறப்புரை நிகழ்த்தினார்.

எச்சரிக்கையோடும். நம்பிக்கையோடும் பெருந்தொற்றின் மற்றொரு அலையை இந்தியா கையாள்வதாகக் கூறிய பிரதமர், பொருளாதார தளத்தில் பல நம்பிக்கை மிகுந்த விளைவுகளுடன் முன்னேறி வருகிறது என்றார். வலுமிக்க ஜனநாயகமான இந்தியா மனித குலத்திற்கு நம்பிக்கை பூங்கொத்தை வழங்கியிருக்கிறது. ஜனநாயகத்தில் ஊசலாட்டமில்லாத இந்தியாவின் நம்பிக்கை 21 ஆம் நூற்றாண்டுக்கு அதிகாரமளிக்கும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு திறன் மற்றும் அறிவியல் ஆர்வம் ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மிகப் பெரிய, பாதுகாப்பான, வெற்றிகரமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளம் பற்றி பேசிய பிரதமர், கடந்த மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 4.4 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகக் கூறினார். ட்ரோன்கள், விண்வெளி, புவி சார்ந்த வரைபடம் உருவாக்குதல் போன்ற துறைகளை இந்தியா முறைப்படுத்தியுள்ளது என்றும், தகவல் தொழில்நுட்பம், பிபிஓ போன்ற துறைகள் தொடர்பான காலத்திற்கு ஒவ்வாத தொலை தகவல் தொடர்பு ஒழுங்குபடுத்தும் விதிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

உலகளாவிய வழங்கல் தொடரில் உலகின் நம்பகமான கூட்டாளியாக இருப்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், பல நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது என்றார். புதிய கண்டுபிடிப்பில், தொழில்நுட்பத்தை ஏற்பதில் இந்தியாவின் திறன்களும், தொழில் முனைவோர் உணர்வும் இந்தியாவை உலகளாவிய கூட்டாளியாக மாற்றியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் என்று பிரதமர் கூறினார்.

தற்சார்பு என்ற தனது தேடலுக்காக நடைமுறைகளை எளிதாக்குவதில் மட்டும் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்று உலகப் பொருளாதார அமைப்பில் கூறிய திரு.மோடி, முதலீடு மற்றும் உற்பத்திக்கும் ஊக்கமளிக்கிறது என்றார். 14 துறைகளில் 26 பில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். அடுத்த 25 வருடங்களுக்கான இலக்குகளை மனதில் கொண்டு இந்தியா கொள்கைகளை உருவாக்குகிறது என்று அவர் வலியுறுத்தி கூறினார்.

மாறி வரும் சூழலில் உலக ஒழுங்கின் சவால்களை கையாளும் நிலையில், பல வகைப்பட்ட உலக அமைப்புகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், மாற்றங்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகளிலும் மாற்றங்கள் தேவை என்றார். எனவே ஒவ்வொரு ஜனநாயக நாடும் இந்த அமைப்புகளின் சீர்திருத்தங்களை வற்புறுத்துவது அவசியம் என்றும், இதுதான் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களைக் கையாள்வதற்கு உதவும் என்றும் கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***************