Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகத்தரம் வாய்ந்த ஜான்சி ரயில் நிலையம் ஜான்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிப்பதை உறுதி செய்யும்: பிரதமர்


உலகத் தரம் வாய்ந்த ஜான்சி ரயில் நிலையம் ஜான்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிப்பதை உறுதி செய்யும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நவீன ரயில் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதி இது என்றும் பிரதமர் திரு.மோடி கூறினார்.

 

ஜான்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அனுராக் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜான்சி ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

 

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “இந்தியா முழுவதும் நவீன ரயில் நிலையங்களை அமைப்பதற்கான எங்கள் முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக, இந்த ரயில் நிலையம் ஜான்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிப்பதை உறுதி செய்யும்” எனப் பதிவிட்டுள்ளார்.

***

SRI/CR/DL