Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உரி தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர் முகமது அஷ்ரப் கனி பிரதருடன் கலந்துரையாடல்


ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர் முகமது அஷ்ரப் கனி ஜம்மு காஷ்மீர் உரியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் கனி, அனைத்து விதமான தீவிரவாத அச்சுறுத்தலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு ஒற்றுமையுடன் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் கனி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
ஆப்கானிஸ்தானின் ஆதரவுக்காக அதிபர் கனிக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.