Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தராகண்ட் மனா கிராமத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

உத்தராகண்ட் மனா கிராமத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


ஜெய் பத்ரி விஷால்! ஜெய் பத்ரி விஷால்! ஜெய் பத்ரி விஷால்!

ஜெய் பாபா கேதார்! ஜெய் பாபா கேதார்! ஜெய் பாபா கேதார்!

என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது, மனம் மகிழ்ச்சியடைந்தது, இந்தத் தருணங்கள் உயிர்ப்புடன் மாறியுள்ளன.  இந்த தசாப்தம் உத்தராகண்ட் மாநிலத்திற்கு சொந்தமானது என்று நான் முன்பு கூறினேன்.  பாபா கேதார் மற்றும் பத்ரி விஷால் அந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது. இன்று, இந்த புதிய திட்டங்களுடன் அதே உறுதியை மீண்டும் வலியுறுத்த நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்.

இந்தியாவின் எல்லையில் உள்ள கடைசி கிராமமாக மனா கிராமம் அறியப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமம், எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள் நாட்டின் பலமான காவலர்களாக உள்ளனர்.  தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்து வரும் மனா மக்களுக்கு நன்றி.

நண்பர்களே, 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இரண்டு முக்கிய தூண்களில், முதலாவது, நமது பாரம்பரியத்தின் பெருமை. இரண்டாவது, வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளும். இன்று உத்தராகண்ட் இந்த இரண்டு தூண்களையும் பலப்படுத்தி வருகிறது. கேதார்நாத் மற்றும் பத்ரி விஷால் தரிசனங்களால் நான்  ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். 130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம்.

பாபா கேதார்நாத், பத்ரி விஷால் மற்றும் சீக்கிய குருக்களின் ஆசீர்வாதமே முன்னேற்றத்திற்கு காரணம். உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் முன்னெப்போதும் இல்லாத இந்த முன் முயற்சி நிறைவடையும் போது மகிழ்ச்சி அடைவார்கள்.

நண்பர்களே, கடினமான பணிச்சூழலில் இந்தத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஷ்ரம்ஜீவிகள் மற்றும் பிற பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்.அவர்கள் கடவுளின் பணியைச் செய்கிறார்கள், நீங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்கிறீர்கள், அவர்களை ஒருபோதும் ஊதியம் பெறும் தொழிலாளர்களாகக் கருதுவதில்லை, அவர்கள் ஒரு தெய்வீகத் திட்டத்திற்கு பங்களிக்கிறார்கள்.  தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பணிகளை பாபா கேதாரை வணங்குவதற்கு ஒப்பிட்டது ஒரு சிறந்த அனுபவம்.

நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அடிமைத்தனத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது., சிலர் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை   குற்றமாகக் கருதுகின்றனர். நீண்ட காலமாக நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மிக மோசமான நிலையில்  இருந்தன. தற்போது உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இந்த ஆலயங்களைப் புகழ்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள். சோம்நாத் கோவில் மற்றும் ராமர் கோவில் கட்டும் போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்த ஆலயங்களின் பாழடைந்த நிலை அடிமை மனப்பான்மையின் தெளிவான அறிகுறியாகும். இந்த ஆலயங்களுக்கு செல்லும் பாதைகள் கூட மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இந்தியாவின் ஆன்மீக மையங்கள் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டன. இதற்கு முந்தைய அரசுகளின் சுயநலம் தான் காரணம். இந்த ஆன்மீக மையங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பக்தியை வளர்க்கும் இடங்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்று, காசி, உஜ்ஜயினி, அயோத்தி மற்றும் பல ஆன்மீக மையங்கள் தங்கள் இழந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கின்றன. கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் சேவைகளை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் போது நம்பிக்கை மேலும் வலுப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலில் இருந்து குஜராத்தின் பவகாத்தில் உள்ள மா காளிகா கோவில் வரை தேவி விந்தியாச்சல் வழித்தடம் வரை இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மேம்பாடு பிரதிபலிக்கிறது. இந்த நம்பிக்கை மையங்களை யாத்ரீகர்கள் எளிதில் சென்றடைவார்கள். சேவைகள் முதியவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

நண்பர்களே, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், வீடுகள்தோறும் குடிநீர். பஞ்சாயத்துக்களை கண்ணாடி இழை வழியாக இணைத்தல், ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள், தடுப்பூசி செலுத்தும்போது மலைப்பகுதிகளுக்கு முன்னுரிமை, பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கையை எளிதாக்கும் நடவடிக்கையாக ஏழைகளுக்கு விலையில்லா ரேஷன், இந்த மக்களுக்கு கவுரவம் அளித்தல் போன்ற வசதிகள், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை இளைஞர்களுக்கு தந்தன.  சுற்றுலாவை அதிகப்படுத்தின.   இளைஞர்களின்  திறன் மேம்பாட்டுக்கு  இரட்டை எஞ்சின் அரசு   தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லைப்பகுதி இளைஞர்களை என்சிசி-யுடன் இணைப்பதற்கான இயக்கம் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கும்.

நவீனமான போக்குவரத்து தொடர்பு என்பது தேசப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில், இதற்காக ஒன்றன் பின் ஒன்றாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். சில ஆண்டுகளுக்கு முன், பாரத் மாலா, சாகர் மாலா என்ற இரண்டு பெரிய போக்குவரத்து திட்டங்கள் தொடங்கப்பட்டன. பாரத்மாலா திட்டத்தின் கீழ், நாட்டின் எல்லைப்பகுதிகள் இணைக்கப்பட்டதோடு மிகச் சிறந்த விரிவான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. சாகர் மாலா திட்டத்தின் கீழ், இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் போக்குவரத்து வலுப்படுத்தப்பட்டது.  கடந்த 8 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஜம்மு காஷ்மீரிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை, எல்லைப்பகுதி போக்குவரத்து விரிவாக்கப்பட்டது. 2014 முதல் எல்லைப்புற சாலைகள் அமைப்பு சுமார் 7,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகளை அமைத்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல முக்கியமான சுரங்கப் பாதைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எப்போதும் மாநிலத்தின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும். இந்த நம்பிக்கையை பெறுவதற்கு பாபா கேதார், பத்ரி விஷாலிடமிருந்து ஆசிகளைக் கோர நான் இங்கே வந்திருக்கிறேன்.

பாரத் மாதா கி ஜே!  பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே!

ஜெய் பத்ரி விஷால்! ஜெய் பத்ரி விஷால்! ஜெய் பத்ரி விஷால்!

ஜெய் பாபா கேதார்! ஜெய் பாபா கேதார்! ஜெய் பாபா கேதார்!

 

***************