Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்


உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.

இதன் பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் மத்தியப் பிரதேசம் செல்லும் அவர், இசாகர் குருஜி மகாராஜ் ஆலயத்தில் தரிசனமும், பூஜையும் செய்வார். பிற்பகல் 4.15 மணியளவில் ஆனந்த்பூர் தாமில் பொது நிகழ்வில் பங்கேற்கும் அவர், அதில் திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.

உத்தரப் பிரதேச பயணத்தின் போது அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் பிந்த்ராவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பர்கி கிராமத்தில் சர்தார் வல்லபாய் படேல் அரசு கல்லூரி  உள்ளிட்டவற்றை பிரதமர் திறந்துவைப்பார். 356 ஊரக நூலகங்கள், 100 அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றையும் அவர் தொடங்கிவைப்பார். வாரணாசியின் சோலாபூரில் பொலிவுறு நகர இயக்கத்தின் கீழ் 77 தொடக்க பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு  அடிக்கல் நாட்டுவதோடு கஸ்தூர்பா காந்தி பள்ளிக்கான புதிய கட்டடம்  கட்டுவதற்கும் அவர்  அடிக்கல் நாட்டுவார்.

***

(Release ID: 2120622)
TS/SMB/AG/RJ