உத்தரப்பிரதேச மாநில உதய நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேசத்தின் உதய தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள். பாரதப் பண்பாட்டில் எண்ணற்ற புராண, வரலாற்றுக் காலகட்டங்களுக்கு சாட்சியாக விளங்கும் இந்தப் புனித பூமி, கடந்த எட்டு ஆண்டுகளாக வளர்ச்சியின் புதிய அத்தியாயங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அரசுடனும், மாநில மக்களின் அற்புதமான திறமை, அயராத கடின உழைப்புடனும், நமது அன்புக்குரிய இந்த மாநிலம் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
***
(Release ID: 2095661)
TS/PLM/AG/KR
उत्तर प्रदेश के स्थापना दिवस पर राज्य के अपने सभी भाई-बहनों को मेरी ढेरों शुभकामनाएं। भारतीय संस्कृति में अनगिनत पौराणिक और ऐतिहासिक कालखंडों की साक्षी रही यह पावन धरती पिछले आठ वर्षों से विकास के नित-नए अध्याय रचने में जुटी है। मुझे पूरा भरोसा है कि जनकल्याण के लिए समर्पित सरकार…
— Narendra Modi (@narendramodi) January 24, 2025