Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கு பிரதமர் சிறப்பு அபிஷேகம் செய்தார்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கு பிரதமர் சிறப்பு அபிஷேகம் செய்தார்


தீபாவளியை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமரின் உருவத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி சிறப்பு அபிஷேகங்களை செய்து வழிபட்டார். சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தி எடுத்த பிரதமர், அங்கு துறவிகளை சந்தித்து உரையாடினார்.

அங்கு திரண்டிருந்த பக்தர்களிடையே உரையாற்றிய பிரதமர், ராம்லாலாவின் தரிசனமும், அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் பாக்கியமும் ராமரின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்று, சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில் தீபாவளி வந்துள்ளதாகவும், இந்த சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று தெரிவித்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற கொள்கைகளை ராமரின் ஆட்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான போதனைகள் மற்றும் சிந்தனைகளில் நாம் காண முடியும். “பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள் வளர்ந்த இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கலங்கரை விளக்கம். இது மிகக் கடினமான இலக்குகளை அடைய உதவுகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

செங்கோட்டையில் சுதந்திரதின உரையின்போது தான் கூறிய ஐந்து உறுதிமொழிகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த ஐந்து உறுதிமொழிகளும் அனைவரின் கடமை உணர்வுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

ஐந்து உறுதிமொழிகள், நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மற்றும் அடிமை மனோபாவத்தை நீக்குவதாகும். தாயையும், தாய் நாட்டையும் சொர்க்கத்தையும் விட மேலாக நினைப்பதற்கு பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு வழிகாட்டியதாக பிரதமர் கூறினார். இதற்கு சான்றாக ராமர் கோயில், காசி விஸ்வநாதர் ஆலயம், கேதார்நாத் மற்றும் மகாகல் லோகா ஆகிய இடங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்திய நாட்டின் பெருமைகளாக விளங்கும் வழிபாட்டுத் தலங்களை தமது அரசு புதுப்பித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870488

                               **************

KG/SRI/SHA