Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா அமைப்பது குறித்து பிரதமர் பாராட்டு


உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுவதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் இன்று பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா திறப்பு விழா குறித்து மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு பியூஷ் கோயலின் ட்விட்டர் ஒன்றைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:

 “உத்தரப்பிரதேசம் வளமான ஜவுளி பாரம்பரியத்தையும், பெரிய சந்தை மற்றும் நுகர்வோர் தளத்தையும் கொண்டுள்ளது. இது கடின உழைப்பாளிகளான நெசவாளர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களின் தாயகமாகும். லக்னோ மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா அமைப்பது உத்தரப்பிரதேசத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.”

“உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இன்று மிக முக்கியமான நாள். லக்னோ மற்றும் ஹர்தோயில் பிஎம் மித்ரா பூங்கா திறக்கப்பட உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.”

1000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பிஎம் மித்ரா பூங்காக்கள் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு பல புதிய வேலை வாய்ப்புகளையும் கொண்டு வருகின்றன. இதனால் நாட்டின் ஜவுளித் துறையும் புதிய பலத்தைப் பெறும்.”

***

(Release ID: 1917592)

AP/PKV/AG/KRS