Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேசத்தின் ஜேவாரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

உத்தரப்பிரதேசத்தின் ஜேவாரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை


பாரத மாதாவுக்கு ஜெய்,  பாரத மாதாவுக்கு ஜெய்.

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மிகவும் பிரபலத் தலைவரும் கர்மயோகியுமான திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே,  துடிப்புமிக்க எங்களது பழங்கால சகாவும் துணை முதலமைச்சருமான திரு.கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு.ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே.சிங், சஞ்சீப் பால்யான், எஸ்.பி.சிங் பாஹேல் மற்றும்  பி.எல்.வர்மா அவர்களே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களே, இங்கு பெருந்திரளாகக் குழுமியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே.

நொய்டா சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவிற்காக இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.  தௌஜி கண்காட்சிக்கு பிரசித்திப்பெற்ற ஜேவார், இன்று, சர்வதேச வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விமான நிலையம் மூலம், தில்லி தலைநகரப் பகுதி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இதற்காக, உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.  

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியா, மிகச்சிறந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.    மேம்பட்ட சாலைகள், ரயில்வே கட்டமைப்பு மற்றும் விமான நிலையங்கள் போன்றவை, வெறும் கட்டமைப்புத் திட்டங்கள் மட்டுமல்ல, மாறாக அவை, இந்தப் பகுதி முழுவதையும், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.   ஏழைகள் அல்லது நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் அல்லது வணிகர்கள், தொழிலாளர்கள் அல்லது தொழில்முனைவோர் என யாராக இருந்தாலும், அனைவரும் இதன் மூலம் மிகுந்த பலனடைவார்கள்.   தடையற்ற மற்றும் கடைக்கோடி வரையிலான போக்குவரத்து வசதிகள் கிடைத்தால், அந்தப் பகுதியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.  நொய்டா சர்வதேச விமான நிலையம், மிகச்சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதியைக் கொண்ட விமான நிலையத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும்.   டாக்ஸி முதல் மெட்ரோ மற்றும் பிற ரயில்  என, இங்கு வந்துசெல்ல அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும்.   விமான நிலையத்தைவிட்டு நீங்கள் வெளியே வந்தவுடனேயே, யமுனா அதிவிரைவுச்சால அல்லது நொய்டா-கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச்சாலைக்கு நேரடியாகச் செல்ல முடியும்.  உத்தரப்பிரதேசம், தில்லி அல்லது அரியானாவின் எந்தப்பகுதிக்கும் நீங்கள் செல்லலாம்,  புறவட்ட விரைவுச்சாலையையும் நீங்கள் உடனடியாக அடைய முடியும்.    தில்லி – மும்பை அதிவிரைவுச்சாலையும் விரைவில் தயாராகி விடும்.  பிரத்யேக சரக்குப் பாதைக்குச் செல்லவும் நேரடி இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.  அனைத்திற்கும் மேலாக, நொய்டா சர்வதேச விமான நிலையம்,  வட இந்தியாவின்  சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக அமைய உள்ளது.  இது,  இந்தப் பகுதி முழுவதையும் கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான தேசிய பெருந்திட்டத்தின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக மாற்றும்.  

நண்பர்களே,

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருவதோடு, இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களையும் வாங்கி வரும் நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையம் இதில் முககியப் பங்கு வகிக்கும்.    அத்துடன்,  இந்த விமான நிலையம், 40 ஏக்கர் பரப்பளவுள்ள நாட்டின் மிகப்பெரிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையாக மாற்றியமைக்கக் கூடிய வசதிகளைக் கொண்டதாக அமைவதன் மூலம்,  உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு விமானங்களும் இங்கு வந்து பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அத்துடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும்.   தற்போது, நமது விமானங்களில் 85 சதவீத விமானங்களை பழுதுபார்த்துப் பராமரிக்க வெளிநாடுகளுக்கு அனுப்புவதால்,  ஆண்டுக்கு 15ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.   இந்த விமான நிலையத் திட்டம் 30ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளது.  அதன்பின், பராமரிப்பிற்காக, விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிலை மாறும்.  

சகோதர, சகோதரிகளே,

விமானப் போக்குவரத்து வசதி விரிவடைந்தால், சுற்றுலாத் தொழிலும் மலர்ச்சிபெறும்.   மாதா வைஷ்ணவ தேவி ஆலயம் மற்றும் கேதார்நாத் யாத்திரைக்காக ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்திய பிறகு, அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதைக் காண்கிறோம்.      நொய்டா சர்வதேச விமான நிலையமும்,   மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.   

நண்பர்களே, 

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழித்து தான், பெறத் தகுதியுடைய வசதிகளை உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது பெற்று வருகிறது.  இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட அரசின் முயற்சிகளால், உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது, நாட்டின் அனைத்துப் பகுதிகளுடனும் போக்குவரத்து இணைப்பு வசதிகளைக் கொண்டதாக மாறி வருகிறது.    லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மேற்காள்ளப்பட்டு வருகிறது.   அதிவிரைவு ரயில்பாதை, விரைவுச்சாலை, மெட்ரோ இணைப்பு அல்லது கிழக்கு – மேற்குக் கடற்கரைகளை இணைக்கும் பிரத்யேக சரக்குப் போக்குவரத்துப் பாதை  போன்றவை, நவீன உத்தரப்பிரதேசத்தின் புதிய அடையாளங்களாகத் திகழும்.  

சகோதர, சகோதரிகளே,

 

முந்தைய அரசுகளால், பற்றாக்குறையிலும், இருளிலும் வைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று, தேசியளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்கிறதுசர்வதேச தரத்திலான மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தில் இன்று உருவாக்கப்படுகின்றன. சர்வதேச தரத்திலான நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், ரயில் இணைப்புத் திட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் மையமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளதுஉத்தரப் பிரதேசத்தின் சர்வதேச விமான இணைப்பு, உத்தரப் பிரதேசத்தின் சர்வதேச அடையாளத்துக்கு புதிய பரிமாணங்களை வழங்குகிறது. அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்த விமான நிலையம் செயல்படும்போது, 5 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறும்.

 

நண்பர்களே,

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியை, உத்தரப் பிரதேசத்தில் இருந்த முந்தைய அரசுகள் எவ்வாறு புறக்கணித்தன என்பதற்கு ஜெவார் விமான நிலையம் உதாரணமாக உள்ளது. இந்த திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் பா. அரசு 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் முந்தைய மத்திய அரசால் இது கிடப்பில் போடப்பட்டது. தற்போது இரட்டை என்ஜின் அரசின் முயற்சியால், அதே விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுப்படுவதை நாம் பார்க்கிறோம்.

முன்பு, கட்டமைப்பு அறிவிப்புகள் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக அவசர கதியில் அறிவிக்கப்பட்டன. ஆனால் செயல்படுத்தவில்லைஅதுபோல் நாங்கள் செய்யவில்லை. ஏனென்றால் கட்டமைப்பு அரசியலின் அங்கம் அல்ல, எங்களுக்கு அது தேசிய கொள்கையின் ஒரு பகுதி. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம்தான் எங்கள் பொறுப்பு. கட்டமைப்புப் பணிகள் குறித்த காலத்தில் நிறைவடைவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்

 

நண்பர்களே,

 

முன்பு, விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாங்குவதில் நிலவிய முறைகேடுகள், வளர்ச்சித் திட்டங்கள் தாமதமாவதற்கு தடையாக இருந்தன. நாட்டு நலன் கருதி, அது போன்ற தடைகளை நாங்கள் அகற்றினோம். முழு வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகம் நிலங்கள் கொள்முதல் செய்வதை நாங்கள் உறுதி செய்தோம்முடிவில் 30,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு நாங்கள் அடிக்கல் நாட்டியுள்ளோம்.

நண்பகர்ளே,

இன்று தரமான கட்டமைப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்படுகிறது. உடான் திட்டத்தால், சாமானிய மனிதர்கள் விமானத்தில் பறக்கும் கனவு நனவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், உத்தரப் பிரதேசத்தில் 8 விமான நிலையங்களில் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே,

  • நாட்டில் சில அரசியல் கட்சிகள், சுயநலனை முக்கியமாக கருதுகின்றன. ஆனால், நாங்கள், நாடுதான் முதலில் என்ற உணர்வுடன் உள்ளோம்.   அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் நம்பிக்கை என்பதுதான் எங்களது மந்திரம். கடந்த சில வாரங்களாக சில அரசியல் கட்சிகள் செய்த அரசியலை உத்தரப்பிரதேச மக்களும், நாட்டு மக்களும் பார்த்தனர். ஆனால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகவில்லை. 100 கோடி கொவிட் தடுப்பூசி இலக்கை இந்தியா  கடந்துள்ளது. சமீபத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டதுஉத்தரப் பிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைத்து சுகாதாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளன. மஹோபாவில் கடந்த வாரம் தான் நீர்ப்பாசனத் திட்டங்கள், புதிய அணைத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஜான்சியில் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடம் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பூர்வாஞ்சல் விரைவுச் சாலை .பி. மக்களுக்கு அரப்பணிக்கப்பட்டது. இன்று நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எங்களின் தேசபக்தி மற்றும் தேச சேவைக்கு முன், சுயநல அரசியல் கட்சிகளால் நிற்க முடியாது.

 

நண்பர்களே,

21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் வைத்து, பல நவீன திட்டங்கள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த முன்னேற்றம், சாமானிய இந்தியர்களின் வளத்தை உறுதி செய்யும். இந்த சர்வதேச விமான நிலையத்துக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்

என்னுடன் சேர்ந்து கூறுங்கள்:

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

 

மிக்க நன்றி!