Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாதில் வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

உத்தரப்பிரதேசத்தின்  காஸியாபாதில் வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

உத்தரப்பிரதேசத்தின்  காஸியாபாதில் வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

உத்தரப்பிரதேசத்தின்  காஸியாபாதில் வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2019) உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாதுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். ஹிண்டான் விமான நிலையத்தில் சிவில் முனையத்தைத் தொடங்கிவைத்ததைக் குறிக்கும் வகையில் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார். பின்னர் ஷிக்கந்தர்பூருக்கு சென்ற அவர், தில்லி – காஸியாபாத் – மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து முறை (ஆர்.ஆர்.டி.எஸ்)க்கும் அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த அவர். அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு, சான்றிதழ்களையும் வழங்கினார்.

காஸியாபாதில் உள்ள ஷாகீத் ஸ்தல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றிருந்த பிரதமர், ஷாகீத் ஸ்தல் நிலையத்திலிருந்து தில்ஷா கார்டன் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் செய்தார்.

காஸியாபாதின் சிக்கந்தர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காஸியாபாத் என்பது போக்குவரத்துத் தொடர்பு, தூய்மை, தலைநகர் என்ற மூன்று சிறப்புகளைப் பெற்றுள்ளது என்றார். காஸியாபாதில் சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், தூய்மைத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இது, உத்தரப்பிரதேசத்தின் வணிக மையமாகவும் விளங்குகிறது என்றார்.

ஹிண்டான் விமான நிலையத்தில் புதிய சிவில் முனையம் தொடங்கப்பட்டிருப்பதையடுத்து, காஸியாபாதைச் சேர்ந்த மக்கள், தில்லிக்குச் செல்வதற்குப் பதிலாக காஸியாபாதிலிருந்தே மற்ற நகரங்களுக்கு விமானம் மூலம் பயணம் செய்ய முடியும் என்று பிரதமர் கூறினார்.

நாட்டிலேயே முதலாவதாக ரூ.3000 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள தில்லி-மீரட் துரித ரயில் போக்குவரத்துப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இது நிறைவடையும் போது பயண நேரம் கணிசமாகக் குறையும் என்றார். இது போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதி, நாடுமுழுவதும் உருவாக்கப்பட உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

*****