உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோரக்பூர் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜோத்பூர் – அகமதாபாத் (சபர்மதி) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை இரண்டு ரயில்கள் ஆகும். கோரக்பூர் ரயில் நிலையத்தை சுமார் ரூ 498 கோடி செலவில் மறுவடிவமைப்பு செய்யும் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கோரக்பூர் ரயில் நிலையத்தின் மாதிரியை அவர் ஆய்வு செய்தார்.
பிரதமருடன் உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரவி கிஷன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னணி
கோரக்பூர் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அயோத்தி வழியாகச் சென்று, மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் அதே வேளையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும். ஜோத்பூர் – சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜோத்பூர், அபு ரோடு மற்றும் அகமதாபாத் போன்ற பிரபலமான இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் அதே வேளையில் பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.
சுமார் ரூ. 498 கோடி ரூபாய் செலவில் கோரக்பூர் ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கான அடிக்கல், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும்.
***
AD/PKV/DL