Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்கல தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து


உத்கலா தினத்தையொட்டி ஒடிசா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவின் வரலாறு, இலக்கியம் மற்றும் இசை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் ஒடிசா அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“உத்கல தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துக்கள்!

இந்த நாள் ஒடிசாவின் புகழ்பெற்ற கலாச்சாரத்திற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஒடிசாவின் வரலாறு, இலக்கியம் மற்றும் இசையில் இந்தியா பெருமை கொள்கிறது. கடின உழைப்பாளிகளான ஒடிசா மக்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். கடந்த ஓராண்டாக, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசும், ஒடிசா மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

“உத்கல தின நல்வாழ்த்துக்கள்!

***

(Release ID: 2117100)
TS/PKV/RR/SG