உஜ்வால் பகிர்மானக் கழகங்கள் உறுதியளிப்புத் திட்டத்தின் (Ujwal DISCOM Assurance Yojana – UDAY) முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடனை சரிசெய்தல், கண்காணிப்பு வழிமுறைகள், நிதி அளவில் முன்னேற்றம், செயல்பாட்டு சாதனைகள் மற்றும் நுகர்வோர் மேம்பாடு போன்ற விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் அரசின் மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
நிலக்கரி சுரங்கம் மற்றும் கனிம வளங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, ஏலத்துக்குப் பிறகு, சுரங்கங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான வழிவகைகள் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். புவி வளங்கள் கொண்ட பிராந்தியங்களை கண்டறிவதற்கான பணிகளின்போதும், மதிப்பீட்டுப் பணியின்போதும், தாதுப் பொருட்கள் தொடர்பான அனைத்து துறைகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தின்போது, மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மற்றும் பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் பிற அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Reviewed various aspects of UDAY & mineral block auction at a high level meeting today. https://t.co/w2nX0VHbo7
— Narendra Modi (@narendramodi) July 21, 2017