பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் DISCOM- களின் 30.09.2015 நிலவரப்படியான நிலுவைத் தொகையில் 50 சதவீதத்திற்கும் கூடுதலானதை மாநிலங்கள் மேற்கொள்வதற்கான காலக் கெடு நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் உதய் திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் DISCOM செயல்நிலை, நிதிநிலை மீட்சிக்கான திட்டத்துக்கும் காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டது. முன்பு 2016 மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு தற்போது ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு காரணமாக உதய் திட்டத்தில் பங்கேற்க இயலாத மாநிலங்கள் தற்போது இந்தத் திட்டத்தில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 19 மாநிலங்கள் UDAY திட்டத்தில் சேர்வதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. இவற்றில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப், பீஹார், அரியானா, குஜராத், உத்தரகாண்ட், ஜம்முகாஷ்மீர் ஆகிய 10 மாநிலங்கள் மத்திய அரசுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 2015 – 16 ம் ஆண்டில் ரூ. 99,541 கோடி அளவுக்கு பத்திரங்கள் பங்கேற்கும் மாநிலங்களால் அவற்றின் நிலுவைக் கடன்களில் 50 சதவீதத்தை திருப்பிச் செலுத்துவதற்காக வெளியிடப்பட்டன. ஜார்கண்ட், ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் நிலுவையிலிருக்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த உதவியது. ரூ. 11,524 கோடி அளவுக்கான டிஸ்காம் பத்திரங்கள் மேலும் கூடுதலாக வெளியிடப்பட்டன. 2016-17 ல் உத்தரப் பிரதேச மாநிலம் ரூ. 14,801 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட்டது.
மின்சார விநியோக நிறுவனங்களான டிஸ்காம் நிதி லாப நிலை மற்றும் புதுப்பிப்புக்காக உதய் திட்டம் உதவி வழங்குகிறது. மேலும் முக்கியமாக நீண்டகாலம் நிலுவையிலுள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர நிலையான தீர்வினை இது உறுதி செய்கிறது.
இந்தத்துறையின் எதிர்கால பிரச்சினைகளுக்கும் கடந்தகால பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண்பது உதய் திட்டத்தின் குறிக்கோளாகும். DISCOM கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நஷ்டம் தவிர்த்து லாப நிலை தொடங்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்த உதவுகிறது. இது கீழ்கண்ட நான்கு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. (i) DISCOM களின் செயல்பாட்டுத் திறன்பாடுகளை மேம்படுத்துவது (ii) மின்சார கட்டணங்களை குறைப்பது (iii) DISCOM களின் வரிக் கட்டணத்தைக் குறைப்பது. இது DISCOM கடன்களில் 75 சதவீதத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலங்களே மேற்கொள்வது. எஞ்சிய கடன் தொகையை பத்திரங்கள் மூலமாகவும் குறைந்த வட்டி கடன்கள் மூலமாகவும் சரிசெய்வது. (iv) மாநிலங்களின் நிதிநிலைக்கு தக அமைந்து கொள்ளுதல் மூலமாக DISCOM நிதி கட்டுப்பாட்டை கட்டாயமாக அமல்படுத்துதல்.
கட்டாய அதிநவீன மீட்டர்கள் பொருத்துதல், மின்மாற்றிகளை மேம்படுத்தி அமைத்தல், மின்சக்தி சிக்கன நடவடிக்கைகள் மூலமாக சராசரி மின்சாரம் கொண்டு செல்லுதல் இழப்பை 22 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்தல், 2018-19 வாக்கில் சராசரி வசூலிக்கப்பட்ட வருவாய் மற்றும் சராசரி மின்சாரம் வழங்குதல் கட்டணம் ஆகியவற்றிடையே உள்ள இடைவெளியை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளால் செயல் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். இதனுடன் மின்சார சிக்கன நடவடிக்கைகளாக LED பல்புகள் பயன்படுத்துதல், திறம் மிக்க விவசாயப் பம்புகள், மின்விசிறிகள் மற்றும் குளிர் சாதனக் கருவிகள் பயன்படுத்துதல் ஊக்குவிக்கப்பட வேண்டும். மலிவான உள்நாட்டு நிலக்கரி வழங்குதல், நிலக்கரி இணைப்பை நியாயப்படுத்தி அமைத்தல், திறனற்ற ஆலைகளிலிருந்து திறம்மிக்க ஆலைகளுக்கு தாராளமாக நிலக்கரி சப்ளையை மாற்றித் தருதல், மொத்தக் கலோரி மதிப்பு அடிப்படையில் நிலக்கரி விலையை நியாயப்படுத்துதல், தூளாக்கப்பட்ட கழுவப்பட்ட நிலக்கரி வழங்குதல், மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிப் பாதைப் பணிகளை விரைந்து முடித்தல் ஆகயவற்றின் மூலம் மின்சாரக் கட்டணக் குறைப்பு ஊக்குவிக்கப்படும்.
இந்தக் காலக்கெடு நீட்டிப்பு ஒப்புதலுடன் மாநிலங்கள் DISCOM களின் 2015 செப்படம்பர் 30 ந் தேதி நிலவரப்படி 75 சதவீதக் கடன்களை 2017 மார்ச் 31 ந் தேதிக்குள் பத்திரங்கள் வெளியீடு மூலம் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையால் கடன்களின் வட்டிச் சுமை குறையும். இந்த ஒப்புதல் காரணமாக உதய் திட்டத்தில் சேர இயலாத மாநிலங்களுக்கு தற்போது சேருவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு DISCOM சீர்திருத்தங்கள் விரைந்து நடைபெற வழிவகை ஏற்படுகிறது.