Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உடான் திட்டத்தின் ஆறு ஆண்டுகால சாதனைகளுக்கு பிரதமர் பாராட்டு


மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்பு சிம்லா மற்றும் தில்லியை இணைத்து பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட்டதாகவும், தற்போது 473 வழித்தடங்களும், 74 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் நிலையங்கள் மற்றும் நீர்வழி விமான நிலையங்களும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் மிகப்பெரிய மாற்று சக்தியாக உருவாகியுள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை உருமாறியுள்ளது என்று தெரிவித்தார். தற்போது பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டிருப்பதோடு, புதிய விமான நிலையங்கள் மிக வேகமாக கட்டமைக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் விமானப் பயணத்தை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

“இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, கடந்த 9 ஆண்டுகளில் உருமாறியுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன, புதிய விமான நிலையங்கள் மிக வேகமாக கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் விமானப் பயணத்தை மேற்கொள்கின்றனர். இத்தகைய மேம்பட்ட இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. #UDANat6”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

                                           ***

(Release ID: 1920389)

AP/BR/SG