Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஜ்வாலா திட்டம் வெற்றி அடைந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி


வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கு திட்டமான உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2.5 கோடியை தாண்டி உள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

“உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை பயன் பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 2.5 கோடியை தாண்டியுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மேற்கு வங்காளம், ஜங்கிபூரில் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கிய குடியரசுத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

உஜ்வாலா திட்டத்தின் வெற்றிக்காக இரவும் பகலும் அயராது உழைத்த அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.