Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு


16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, கசானில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் மசூத் பெஜெஷ்கியானை சந்தித்துப் பேசினார்.

 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் 9-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு டாக்டர் மசூத் பெஜெஷ்கியானுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பிரிக்ஸ் குடும்பத்திற்கு  ஈரானையும் அவர் வரவேற்றார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சபாஹர் துறைமுகத்தின் நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டார்கள். ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு மற்றும் மறுவளர்ச்சி மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மோதல் விரிவடைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற இந்தியாவின்  நிலைப்பாட்டை மீண்டும் முன் வைத்தார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மோதலை சாதுரியமாகத் தீர்ப்பது குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் தங்களது ஒத்துழைப்பைத் தொடர தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு அதிபர் டாக்டர் பெஜெஷ்கியானுக்கு  பிரதமர் அழைப்பு விடுத்தார். அதிபரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

 

 

***

(Release ID: 2067207)

BR/KR