Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

ஈரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியை 24-ம் தேதி சந்தித்தார்.

வர்த்தகம், முதலீடு, இணைப்பு, எரிசக்தி, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிவகைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சபாகர் திட்டம் உட்பட உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை விரைந்து நடைமுறைப்படுத்த இருதரப்பும்  ஒப்புகொண்டன. ஆப்கானிஸ்தான் உட்பட பிராந்திய விஷயங்கள் குறித்த கருத்துக்களை இருதலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.

பிரிக்ஸ் குடும்பத்தில் சேர்வதற்காக அதிபர் ரைசியைப் பிரதமர் பாராட்டினார்.

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதற்கு அதிபர் ரைசி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பிரிக்ஸ் உறுப்பு நாடாக ஈரான் சேர இந்தியா ஆதரவு அளித்ததற்காக பிரதமருக்கு  நன்றி தெரிவித்தார்.

***

AP/PKV/AG