இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு. பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து திரு. நெதன்யாகு பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
பயங்கரவாதத்திற்கு எந்த வடிவத்திலும் இடமில்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிராந்திய அளவில் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிக்கவும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு பிரதமர் திரு நேதன்யாகுவிற்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
***
BR/KV